பக்கம் எண் :

240

     18) இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்ற ஒரு
பெயரும் உண்டு. சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும்,
கொண்டு திகழ்கிறார் இவர். இவருக்கும் ஒரு தனி மூலவர் இருக்கிறார்.
அவரது கோவில் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோப்பில்
இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி
மிகச்சிறப்பான விழாவாகும். சரம சுலோகார்த்தம் விளங்கிய இடமும் இதுதான்.

     19) இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் பெயரே
திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவருக்கும் அமைந்திருப்பது
ஆராய்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.