பக்கம் எண் :

241

40. சிதம்பரம் என்னும் திருச்சித்ர கூடம்

     காயோடு நீடு கனியுண்டு வீசு
          கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
     தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
          திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
     வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
          மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
     தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே - (1159)
                              பெரிய திருமொழி 3-2-2

     காயோடு கனிகளை உண்டு, காற்றை நுகர்ந்து, வேள்விகளுக்கு
சொல்லப்பட்ட ஐந்து தீயினையும், வளர்த்து கடுந்தவம் செய்ய வேண்டாம்.
வேதம் உணர்ந்த மறையோர்கள் தினமும் முறைப்படி வளர்த்த வேள்வித்தீ
ஓங்கும் அளவிற்குப் புகழோங்கி நிற்கும் திருச்சித்திர கூடத்தில் பள்ளி
கொண்ட திருமகள் சேர்மார்பனைச் சிந்தையில் வைத்தாலே போதும்.

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் இன்றைய
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகரங்களுள் ஒன்றாகும், சுற்றுலாப்பயணிகள்
எந்நேரமும் வருகை தரக்கூடிய சுற்றுலாக் கேந்திரமாயும் திகழ்கிறது.

வரலாறு

     பிரம்மாண்ட புராணத்தில் சேத்ர காண்டத்தில் 14 அத்தியாயங்களில்
2437 ஸ்லோகங்களில் பிரம்மதேவன் நாரதருக்கு உரைத்ததாக இத்தல
வரலாறு பேசப்படுகிறது. கிருஷ்ணாரண்யம் என்று அழைக்கப்படும்
ஆரண்யத்தின் மத்தியப்பகுதியில் அழகுற அமைந்துள்ள இத்திருத்தலத்தின்
எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு பிர்ம்மாண்ட புராணம் கூறுகிறது.

     காவிரிக்கு வடக்கு, வெள்ளாற்றுக்குத் தெற்கு, கீழ்கடலுக்கு மேற்கு,
ஸ்ரீமுஷ்ணத்திற்கு கிழக்கு.

     முனிவ, எவ்வுலகிலுஞ் சிறந்தது பூவுலகம். அதில் நாவலந்தீவு என்னும்
பரதக்கண்டஞ்சிறந்தது. அதில் தமிழ்நாடு சிறந்தது. அதில் வடகாவேரியில்
வடதிசை சிறந்தது. அதில் தில்லைவனஞ்சிறந்தது. அதில் புண்டரீகபுரம்
சிறந்தது. அதில்