பக்கம் எண் :

244

     சபை நடுவே எழுந்த பிரம்மன் இதற்குத் தீர்ப்பு சொல்லும் சக்தி தனக்கு
இல்லையென்றும், திருமால் ஒருவரால் தான் இதற்குத் தீர்ப்பளிக்க
முடியுமென்று சொல்ல எல்லோரும் வைகுந்தம் சென்று நடந்ததை விளம்பி
நின்றனர்.

     திருமால் (தன் மனதுக்குள் உகந்த) தில்லை வனத்திற்கு வந்து
நடனமாடுமாறும் அப்போது தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்லித்
தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை நோக்கினார்.

     உடனே விஸ்வகர்மா அரக்கர்களின் தச்சன் மயனையும்
உடனழைத்துக்கொண்டு தில்லைவனத்தில் நடுமையத்தே சித்ர கூடத்தை
அமைத்தான். ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு வேதங்களையும்
நான்கு கோபுரமாக்கினான். 36 ஸ்மிருதி சூத்ரங்களை 36 வாயில்களாகவும் 5
எக்கியங்களை 5 மதில்களாகவும், ஆறு அங்கங்களை 6 வாயில்களாகவும் 6
தரிசனங்களை 6 கதவுகளாகவும், மூன்று வியாகிருதிகளை மூன்று
மாடங்களாகவும், நூறு யாக யூபத்தம்பங்களை நூற்றுக்கால் மண்டபமாகவும்,
அமைத்து சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை,
ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.

     அமைப்புப் பொருந்திய சபையில் நடனம் ஆரம்பித்தது யார்
நன்றாடினார், யார் வெண்றாடினார் என்று கூறமுடியா வண்ணம்
தேவகணங்களும், தேவருலக நடன மாதரசிகளும், சர்வ லோகமும் திகைத்து
மெய்மறந்து நினைவிழந்து நிற்க உக்கிரமடைந்த ருத்ரன் தனது இடதுகாலைத்
தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி நிறுத்தி நிற்கலுற்றான்.
பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு செய்ய இயலாது வெட்கித்தலை
குனிந்து நின்றாள் உமையவள். நடராசனே வென்றான், என்று
சபையோரனைவரும் தீர்ப்புக் கூற, திருமாலும் அதற்கு இசைவு தெரிவித்து
மாயப்புன்னகை புரிய உமையவள் காளியாக மாறி தில்லைவனத்தைச் சுற்றித்
தாண்டவமாடி அந்த வனத்திற்குத் தென்பாற்போய் அதற்கே ஒரு
காவல்தெய்வமாய் நின்றாள். சிவன் திருமாலை நோக்கித் தாங்களும் இதே
திருக்கோலத்தில் இவ்விடத்தே எழுந்தருளி பக்தர்கட்கு அருள்பாலிக்க
வேண்டுமென்று கேட்க அவ்வண்ணமே ஒப்புக்கொண்டார் திருமால்.

மூலவர்

     கோவிந்தராஜன், யோகசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்