| உற்சவர் தேவாதி தேவன், சித்ரகூடத்துள்ளான் என்றொரு உற்சவருண்டு. தாயார் புண்டரீகவல்லி தீர்த்தம் இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு விமானம் ஸாத்வீக விமானம் காட்சி கண்டவர்கள் தில்லை மூவாயிரவர், சிவன், உமையவள், பாணினி, வ்யாக்ரபாதர். சிறப்புக்கள் 1) பதஞ்சலி, கண்ணுவர், ஆகிய முனிவர்களும் இங்கு பெருமானைக் குறித்து தவம் செய்தனர். 2) இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு. 1. புண்டரீக தீர்த்தம் 2. அமுத கூபம் (எம்பெருமான் நடனம் காண வந்தபோது எம்பெருமான் உண்பதற்காக கருடன் அமுதங்கொணர்ந்து வைத்த இடம்) 3. திருப்பாற்கடல், 4. சேஷ தீர்த்தம் 5. கருட தீர்த்தம் 6. காவேரி தீர்த்தம் 7. சுவேத நதி தீர்த்தம் 8. இயமபாகச் சேதன தீர்த்தம் 9. இந்திர தீர்த்தம் 10. அக்கினி தீர்த்தம் 11. நிர்ஜரா தீர்த்தம் 12. சாமி தீர்த்தம் 3) முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் தனித்தனியே இருந்தது. தில்லைத் திருச்சித்ரக்கூடம் என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும். சிற்றம்பலம் என்று நடராஜர் கோவிலை சைவர்களும் வழங்குவதிலிருந்து முற்காலத்தே இவையிரண்டும் தனித்தனியே இருந்தன என்பது தெளிவு. |