பக்கம் எண் :

246

     சிறு அம்பலம் (சிறுகோவில்) என்பதே சிற்றம்பலமாயிருக் கையில்
நடராஜர் கோயில் சிறிய கோவிலாகவும், சித்ரக்கூடம் எனப்பட்ட பெருமாள்
கோயில் பெரிய கோவிலாகவும் இருந்திருக்கின்றன என்றும், நடராஜர்
கோவிலை விரிவுபடுத்துவதற்காக சோழவரசன் பெருமாள் கோவிலை இடித்து
வளைத்துக் கட்டிய பின்பே பெருமாள் கோயில் பிற்காலத்தே (கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டளவில்) சிவன் கோவிலுக்குள் அகப்பட்டுவிட்டதென்றும் வரலாற்று
ஆய்வாளர்கள் கூறுவர்.

     4) தில்லையில் திருமாலும் சிவனும் ஒரு சேரக் கோவில்
கொண்டிருப்பதைக் கண்ட சைவ விருப்பும் வைணவ வெறுப்பும் கொண்ட
சோழன் ஒருவன் திருமாலை நீலக்கடலுக்கே அனுப்பிவிட எண்ணினான்.
அனுப்பியதாகவே ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
 

     மூன்றில் கிடந்த தடங்கடல்
          போய் முன்னைக் கடல்புக
     பிள்ளைத் தில்லை மன்றிற்கு
          இடங்கொண்ட கொண்டல்

     சோழ மன்னன் ஒருவனால் கடலில் எறியப்பட்ட பெருமாள் மீண்டும்
தில்லை மன்றத்தில் இடம் கொண்ட இந்நிகழ்ச்சியை (சோழன் கடலில்
அமிழ்த்திய பிறகு அதனால் சீற்றமுற்றவர்கள் அப்பெருமானை எழப் பண்ணி
இப்போதிருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் பிற்காலத்தே
இவ்விரண்டும் சேர்ந்து ஒரே கோவிலாக பிறிதொரு சோழனால்
கட்டப்பட்டதென்றும் கூறுவர்.)

     5) தில்லை நகர், திருச்சித்ர கூடம், புண்டரிக புரம், என்பதுவும்
இத்தலத்திற்கு அமைந்த திருப்பெயர்கள்.

     6) குலசேகராழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த
ஸ்தலம்.

     7) சிவபெருமானின் நடனத்தைக் காண திருமால் வந்துற்றதை மாணிக்க
வாசகர் தமது திருக்கோவையாரில்
 

     “புரங்கடந்தான் அடிகாண்
      பாண்............................
      ..............தில்லையம்பல