பக்கம் எண் :

247

     மூன்றில் அம்மாயவனே”
          என்ற வரிகளால் உணரலாம்.

     8) பல்லவ மன்னன் படையுடன் வந்து பைம்பொன்னும் முத்தும் மணியும்
இத்தலத்திற்கு அளித்துத் தொழுது நின்றான் என்பதை,

     “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
          படைமன் னவன் பல்லவர்கோன் பணிந்து
     செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
          திருச்சித்ர கூடஞ் சென்று சேர்மின்களே”
     என்கிறார் திருமங்கையாழ்வார்.

     9) இராமன் சித்ரகூட மலையில் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அதே
இராமன்தான் கோவிந்தராஜன் என்ற பெயரில் இந்த திருச்சித்ர கூடத்திலே
திகழ்கிறான் என்பதை குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தமது
பாக்களில் பாடிப் பரவுகின்றனர்.

     10) முதலாம் நந்திவர்மனை (சைவ, சமண மதங்களின் மேல்
பற்றாயிருந்தவனை) திருமங்கையாழ்வார் வைணவத்தின் பால் ஈர்த்தார்.

     இந்த நந்திவர்ம பல்லவனைத்தான் பைம்பொன்னும் முத்தும்
கொணர்ந்து பணிந்த பல்லவன் என்று திருமங்கையாழ்வார் தம் பாடலில்
குறிக்கின்றார்.

     11) கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் பராந்தகசோழன்
தில்லைக் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.

     12) தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை பெருமாள்
ரசித்ததாகவும், எம்பெருமான் பள்ளிகொண்ட அர்ச்சா விக்ரகத்திற்கு அருகில்
இன்றும் நடராஜன் நடனமாடும் கோலத்தில் இருப்பது காண்டற்குரியதாகும்.

     13) கோவில் புஷ்கரணியில் வடக்கேயுள்ள புஷ்கரணியில் (புஷ்கர
ஷேத்ரம்) உள்ளதுபோல் மீன்கள் தரையில் வந்து யாத்ரீகர்களிடம் பொரி
கடலை வாங்கிச் சாப்பிடும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

     14) தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர் இப்பெருமானைத் துதிக்க
வந்தனர் என்பதை,