பக்கம் எண் :

248

     “தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள்
          அந்தணர்களொரு மூவாயிரவ ரேத்த
     அணிமணி யாசனத் திருந்த வம்மான் றாணே”
          என்று குலசேகராழ்வாரும்
     “மூவாயிரநான் மறையாளர் நாளும்
          முறையால் வணங்க அணங்காய சோதி
     தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே”
     என்று திருமங்கையாழ்வாரும் குறிப்பதிலிருந்து அறியலாம்.

     15) உலகில் உள்ள எல்லாவித நடனங்களையும் இங்குள்ள சிற்பச்
சாலையில் காணலாம்.

     16) மிகப்பெரும் மாடமதில்களையும், உயர்ந்த கோபுரங்களையும்
எதிரிகளும் அஞ்சக்கூடிய நெடிய வாசல்களையும் பெற்றதாய்த் தில்லை
விளங்குவதை
 

     “தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
          தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்”

     என்று குலசேகராழ்வார் சொல்வதிலிருந்து தில்லையின் தொன்மை
மாண்பை சிறப்புற உணரலாம்.

     17) சிதம்பர ரகஸ்யம் என்பது நடராஜர் சன்னதியில் மூலஸ்தானத்தில்
உள்ளது.

     18) நாதமுனிகளின் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோவில்
இங்கிருந்து மிகச் சமீப தொலைவில் உள்ளது.

     19) இங்கு ஆண்டுதோறும் பெருமாள் சன்னதியில் பிர்ம்மோத்ஸ்வம்
நடைபெற்றது, இதனை,
 

     “கைதொழ வீதி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
          தெய்வ புள்ளேறி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
     தெருவில் திளைத்து வருவான் சித்திரக் கூடத்துள்ளானே

     என்று திருமங்கையாழ்வாரின் சொற்கள் உணர்த்துகின்றன.