நடுநாட்டுத் திருப்பதிகள் ஒரு விளக்கம் முத்தமிழ் நாட்டின் எல்லைகளை விரித்துரைக்கும் நூல்களில் நடு நாட்டிற்கு எல்லைகளைக் குறிப்பிட்டுப் பகரவில்லை. பண்டைத் தமிழகத்தில் நடு மத்தியமாக இருந்ததால் இப்பெயர் பெற்றதோ என்னவோ? தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாடு 12 பிரிவுகளாக இருந்ததெனக் கூறப்படுகிறது. தென்பாண்டிக் குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டென் | என்று தொல்காப்பியப் பாடல் தமிழ் நாட்டைக் கீழ்க்காணும் 12 பிரிவுகளாகப் பிரிக்கிறது. 1. தென்பாண்டி பாண்டிநாட்டின் தென்பகுதி, இதனையே பொதுவாக தென்னாடு என்று குறிப்பிடுவதும் உண்டு. 2. குடநாடு குடகு மலைப்பகுதி 3. குட்ட நாடு தற்போது கேரளத்தில் உள்ள குட்ட நாட்டுப் பகுதி, குட்டநாட்டுத் திருப்புலியூர் என்ற மலைநாட்டுத் திவ்ய தேசம் இந்நாட்டின் பெயரோடு சேர்த்து வழங்கப்படுகிறது. 4. கற்கா நாடு கன்னடம் அல்லது கன்னடத் தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி. 5. வேணாடு தொண்டை நாடு. தொண்டை நாட்டின் இதுவும் தென்பகுதியையும், ஒய்மாநாட்டு நல்லியக் கோடானும் அவன் பின் தோன்றல்களும் ஆண்டு வந்தனர். இங்கிருக்கும் கோடை மலையை பொருணனும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கை மா என்னும் பகுதியை வேள் நன்னனும் ஆண்டு வந்தனர். |