6. பூழி நாடு தேனி, சின்னமனூர், கம்பம் அடங்கிய பகுதி. 7. பன்றி நாடு திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள பன்றிமலைப் பகுதி 8. அருவா நாடு தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி. 9. அருவா வடதலை நாடு அருவா நாட்டின் வடபகுதி 10. சீத நாடு கோவை மண்டலம் 11. மலை நாடு சேர நாடு (இன்றைய கேரளா) 12. புனல் நாடு சோழநாடு தமிழகத்தின் இப்பன்னிரெண்டு உட்பிரிவுகளும் நடு நாடு பற்றிக் கூறவில்லை. ஒருக்கால் தொல்காப்பியத்திற்கு வெகு காலத்திற்குப் பின்பே இந்நாட்டெல்லை உண்டாகியிருக்கலாம். இந்நடு நாட்டினை ஆண்டவர்களும் குறுநில மன்னர்களாயிருந்தனரே அன்றி முடியுடை வேந்தரைப் போன்று பெருஞ்சிறப்பு பெற்றவராயில்லை. பின் நடு நாட்டின் எல்லைகள் யாதென ஆராயப் புகின் பழந்தமிழ் நூல்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு முடிவு கட்டலாம். வரலாற்றின் மாறுபட்ட போக்குகளினாலும், கால மாறுபாட்டினாலும், நாடும், நிலமும், ஊரும், பிரிவும், சிதைந்து புதிதாக உண்டாவது போல் மேற்குறிப்பிட்ட 12 உட்பிரிவுகளில் ஒரு சிலவற்றை உள்ளடக்கி கொங்கு நாடு தோன்றியது. இக்கொங்கு நாட்டெல்லைப் பற்றி கொங்கு மண்டல சதகத்தின் இரண்டாவது பாடல் கூறுகிறது. வடக்கு பெரும்பாலை வைகாவூர்த் தெற்குக் குடக்கு பொறுப்பு வெள்ளிக் குன்று - கிடக்கும் களித் தண்டலை மேவும் காவிரி சூழ் நாட்டுக் குழித் தண்டலை யளவுங் கொங்கு | சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களைக் கொண்ட பகுதியே பண்டைய கொங்கு நாடாகும். இந்நாட்டினை |