சிறப்புக்கள் 1) இப்பெருமானுக்கு 1) தாஸ ஸத்யன் 2) அச்சுதன் 3) ஸ்த்ரஜ்யோதிஷ் 4) அனகஞ்யோதிஷ் 5) த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி மகிழ்கிறது. இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை எடுத்தாண்டுள்ளார். 2) ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான். ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் சற்று தாமதித்து வைகுண்டத்திலிருந்து விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான். இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டுவரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய தேசத்திற்குமில்லை. கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் கெடிலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. சற்று வேறுபட்ட கருத்திலும் இந்நிகழ்ச்சி சில நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதும் கருடன் விரஜா தீர்த்தம் கொணர ஆகாயத்தில் பறக்கையில் ஒரு ரிஷியின் கமண்டலத்தில் விரஜா தீர்த்தம் இருப்பதையறிந்து தன் அலகினால் கமண்டலத்தைச் சாய்த்து நதியாகப் பெருக்கி இத்தலத்தை நோக்கி ஓடச் செய்தார் என்றும், இதைக் கண்டு சினந்த ரிஷி கருடனை எதிர்க்க மனமில்லாமல் இத்தண்ணீர் கலக்கமடையக் கடவது என்று சபித்தார். உடனே நீர் களங்கமுற்றது. உடனே கருடன் தான் எம்பெருமானின் தாகத்தை தணிக்கவே இந்தக் கைங்கர்யத்தை மேற்கொண்டேன் என்று கூறியதும் அவ்வாறாயின் கலங்கியது மறையக் கடவதென்ன நீரும் முன்போல தெளிந்தது. இன்றளவும் இந்நதியின் நீர் பார்வைக்கு கலங்கியிருப்பதைப் போன்று தெரியினும் கையில் எடுத்துப் பார்த்ததும் தெளிவாகத் தெரிவதைப் பார்க்கலாம். தான் வருவதற்குள் ஆதிசேடனால் எம்பெருமான் தாகவிடாய் தீர்த்ததைக் கண்ட கருடன் எம்பெருமானை நோக்கி நான் கொணர்ந்த தீர்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென விண்ணப்பிக்க கருடா நீ |