பக்கம் எண் :

255

கொணர்ந்த தீர்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். என் ரதோற்சவ
தினத்தில் அந்த நதிக்கரையில் பூசைகளை ஏற்று நின் தீர்த்தத்தையும்
ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல அவ்விதமே இன்றளவும் ரதோற்சவம்
இந்த கெடில நதிக்கரையிலேயே நடைபெறுகிறது.

     3) தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை
இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப்
பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும்
சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான்
திகழ்கிறார் என்பர். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்று
மங்களாசாசனத்தை மொழிந்தார். மூவரும் இவனே என்பதை நம்மாழ்வாரின்
பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.
 

முதலாம் திருவுருவம் மூன்றென்பர்,
          ஒன்றே நிகரிலகு காருருவா நின்னகத்த தன்றே
     முதலாகும், மூன்றுக்கு மென்பர்
          முதல்வா புகரிலகு தாமரையின் பூ - 2656

     4) இங்குள்ள சோழ மன்னன் ஒருவன் விஷ்ணு கோவில்களை
இடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும் ஆடு மேய்க்கும் சிறுவர்கள்
இது சிவன் கோயில் என்று கூற மன்னன் உற்று நோக்க சிவனைப் போல்
அம்மன்னனுக்கு இப்பெருமான் காட்சியளித்தார் எனவும் கூறுவர்.

     5) இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப்
போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில் பெருமாளும்,
தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும்,
வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ள திறம் மேற்கூறியவைகளோடு வியந்து
ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

     6) இவ்வூர் (இத்தலம் பற்றிய) புராணத்தை பிரம்மா என்றும் பாராயணம்
செய்து வழிபட்டு வருவதாக பூ மறையோன் பாராயணத்தில் பணியும்
அயிந்தை நகர் நாராயணனார் என்று மும்மணிக் கோவையில் சுவாமி தேசிகன்
அருளியுள்ளார்.