| 12) இங்குள்ள ராமபிரான் தமது இடது கரத்தில் வில்லேந்தி காட்சி தருகிறார். 13) திருமாலின் அமிசா அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவ அவதாரத்திற்கு இச்சன்னதியின் அருகாமையிலேயே ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான மேடிட்ட பகுதியில் அமைந்து ஒளஷதகிரி என்றழைக்கப்படும் இத்தலம் மிகவும் தொன்மையும் பெரும் சக்தியும் கொண்டதாகும். ஞானத்தையும் கல்வியையும் தரும் ஹயக்ரீவப் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலைக் குறித்து வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைத் துவம்சித்து படைப்புத் தொழிலுக்கான ரஹ்ஸய வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர். இப்பெருமாளை வழிபடுவர்கட்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும். ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இரண்டு இடங்களில் உண்டு. ஒன்று இங்கு மற்றொன்று மைசூரில் உள்ள பரகால மடம். 14) குதிரை முகம் கொண்ட இந்த ஹயக்ரீவம் சகல வித்தைகட்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அவதார நிலையாகும். வித்தைகளின் இருப்பிடம் அதாவது இவர் கல்விக் கடவுள், ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ மஹே | ஞானமயமாக கலக்கமற்ற ஸ்படிகம் போல் திகழும் இந்த தேவனே சகல வித்தைகட்கும் ஆதாரமான ஹயக்ரீவமாகும். இந்த அவதாரத்தில் இப்பெருமானின் தோற்றம் பின் கண்டவாறு பகரப்படுகிறது. சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனி. பஞ்சாயுதங்கள் ஏந்திய நான்கு புஜம். குதிரை முகம். நீண்ட |