பக்கம் எண் :

264

விமானம்

     சுர விமானம்

காட்சி கண்டவர்கள்

     மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், குஷி, சௌனகர்,
காஸ்யபர், முதல் மூன்று ஆழ்வார்கள்.

சிறப்புக்கள்

     1) திருமால் திருவிக்ரம அவதாரம் எடுத்தபோது பூமியை அளந்த
திருவடியை பூஜித்து பூமாதேவி பெருமையுற்றாள். விண்ணோக்கி சத்ய
லோகம் சென்ற திருவடியை பூஜித்து பிரம்மன் பெருமை பெற்றான். தனது
கமண்டல நீரால் பிரம்மன் பூஜித்த திருவடியில் பட்டுச் சிதறிய நீர்த்துளிகளே
கங்கை கிருஷ்ணபத்திரா, சிலம்பாறு என்று புராணங்கள் புகழ்கின்றன.
மூன்றாவது அடியால் மாவலியை பாதாளம் புகுத்தி அங்கும் பெருமாள்
எழுந்தருளி காட்சி கொடுத்து பாதாள லோகத்திற்கு அருள் பாலித்தார்.

     அதே அவதாரத்தை இத்தலத்திற்கும் செய்து காட்டியதால் மூன்று
உலகங்களாலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது இத்தலம்.

     2) இங்குதான் ஆழ்வார்கள் மூவரும் முதன் முதலாக பகவானைத் தூய
தமிழ்ப் பாக்களில் பாடித் துதிக்க ஆரம்பித்தனர். அதுவே பின்னர்
ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக விரிந்தது. முதலாழ்வார்கள்
மூவரும் பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கோவலூரை
அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய பகவான் பெரும்
மழையைப் பெய்விக்கச் செய்தார். முதலில் வந்த பொய்கையாழ்வார்
மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து இரவு தங்குவதற்கு
இடமுண்டோ வென்று வினவ முனிவர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு
ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்து
சேர்ந்த பூதத்தாழ்வார் தமக்கும் தங்குவதற்கு இடம் உண்டோ வென்றார்.
ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாமெனக் கூறிய பொய்கையார் அவரை
உள்ளே அழைத்துக் கொண்டார். சில வினாடிகளில் அவ்விடம் வந்து சேர்ந்த
பேயாழ்வார் யாமும் தங்கவொன்னுமோ என்று கேட்க, ஒருவர் படுக்கலாம்,
இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையுஞ் சேர்த்துக்
கொள்ள இட