பக்கம் எண் :

265

     நெருக்கடிதாளாது முண்டிக்கொள்ள அப்போது நான்காவதாக மேலும்
ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு உண்டாக, ஈதென்ன
விந்தையென்று மூவரும் எம்பெருமானை ஒருங்கே நினைக்க, உடனே
பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தம் திருமேனியை மூவருக்கும்
காட்டி அருள் புரிந்தார்.

     வையம் தகளியாய் என்று பொய்கையாரும்
          அன்பே தகளியாய் என்று பூதத்தாழ்வாரும்
     திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்         

     என்று பேயாழ்வாரும் மங்களாசாசனங்களை பாடியுள்ளனர்.

     முதன்முதலில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான். இங்கு
ஆழ்வார்கள் மூவரும் பெருமாளை அனுபவித்ததை ஸ்ரீமந் நிகாமந்த தேசிகன்
இப்படி வர்ணிக்கிறார்.

     மூன்று ஆழ்வார்களாகிய கரும்பாலையில் மூன்று உருளைகள் கரும்பைப்
பிழிவதைப் போல, தீங்கரும்பான எம்பெருமானை நெருக்கி அவருடைய
திருக்குணங்களாகிய ரஸத்தைப் பருகுகிறார்கள்.

     3) இந்த தலத்தில் கிருஷ்ணன் மகிழ்ந்துறைவதை யெண்ணிய துர்க்கை
விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இவ்விடத்தே கோவில் கொண்டாள்.
துர்க்கைக்கு இங்கே கோவிலும், வழிபாடுகளும் உண்டு. இது மற்றெந்த திவ்ய
தேசத்திற்கும் இல்லாச் சிறப்பம்சமாகும். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை
‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’ என்று
புகழ்கிறார்.

     4) கிருஷ்ணாரண்யத்திலும், ஸ்ரீமுஷ்ணத்திலும் நான் பக்தர்களுடனே
சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறேன். என்று பகவானால் திருவாய்
மலர்ந்தருளப்பட்ட இத்திவ்ய தேசத்தை முதலாழ்வார்கள் மூவரும்
திருமங்கையாழ்வாரும் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர். மணவாள
மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். சுவாமி தேசிகரால் இயற்றப்பட்ட
‘தேஹளிசஸ். துதி’ இப்பெருமாளுக்கு அளிக்கப்பட்ட பக்திரசம் ததும்பிய
பாமாலையாகும்.