பக்கம் எண் :

271

திருவிடவெந்தையை எடுத்துக் கொண்டால் அங்கே எழுந்தருளியிருப்பதைப்
போன்ற வராஹமூர்த்தி வேறெங்கும் இல்லையென்று சொல்லுமளவிற்கு
அமைந்துள்ளது. கடன் மல்லையை எடுத்துக்கொண்டால் அதன் கலைச்
சிறப்பும் பக்திச் சிறப்பும், கடல்ச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் வேறெந்த
திவ்ய தேசத்திற்கும் அமையவில்லையென்று அறுதியிடலாம்.

     திருப்புட்குழியை எடுத்துக் கொண்டால் ஸ்ரீஇராமானுஜரின் முதல்
குருவாக விளங்கிய யாதவப் பிரகாசர் ஜெனித்த ஊராகவும், இராமானுஜருக்கு
வித்யாரம்பம் துவங்கிய ஊராகவும் அமைகிறது. திருநீர்மலையை
எடுத்துக்கொண்டால் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதவாறு
திருமங்கையாழ்வார் 6 மாத காலம் தங்கியிருந்து தரிசித்த பெருமை பெற்றுத்
திகழ்கிறது.

     திருக்கடிகையை எடுத்துக்கொண்டால் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி இன்றும்
அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
திருஎவ்வூள் (திருவள்ளூர்) வீரராகவப் பெருமாளை எடுத்துக்கொண்டால்,
எம்பெருமான் வந்து படுப்பதற்கு தேடிக்கொண்ட இடமாகிறது. திருநின்றவூர்ப்
பெருமாளை எடுத்துக்கொண்டால் அவர் பக்தர்கட்கு ஆவிபோன்று,
பத்தராவிப் பெருமாளாகத் திகழ்கிறார்.

     திவ்ய தேசங்களின் புகழோடு இம்மண்டலம் நின்றுவிடவில்லை.
ஆழ்வார்களில் நால்வரின் அவதார ஸ்தலங்களையும் தன்னகத்தே கொண்டு
திகழ்கிறது. முதலாழ்வார்கள் மூவரும், திருமழிசையாழ்வாரும் அவதரித்த
மண்டலம் என்னும் பெருமை கொண்டது.

1. பொய்கையாழ்வார்

     காஞ்சியில் உள்ள திருவெஃகாவென்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

2. பூதத்தாழ்வார்

     கடன்மல்லை எனப்படும் மகாபலிபுரத்தில் அவதரித்தார்.

3. பேயாழ்வார்

     சென்னையில் உள்ள திருமயிலையில் அவதரித்தார்.

4. திருமழிசையாழ்வார்

     சென்னைக்கு அருகேயுள்ள திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்

     இது மட்டுமா பெருமை. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையில்
நடுநாயகமாகவும், திருவரங்கச் செல்வத்தைத் திருத்திப் பணி செய்தவருமான
எம்பெருமானாரையும்