ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு கண்ணாக விளங்கும் வடகலை ஸம்பிரதாயத்தில் முக்கிய ஆச்சாரியரான ஸ்வாமி வேதாந்த தேசிகனையும் ஈந்து வான் முட்டும் பெரும்புகழடைந்து இலங்குகிறது. காஞ்சி வரதராஜனுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தவரும் தனது ஆச்சார்யனாக ஏற்றுக்கொள்ள விழைந்த இராமானுஜருக்கு தேவப்பெருமாள் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளைக் கூறி பெரியநம்பியை அடையுமாறு கூறிய திருக்கச்சி நம்பிகள் அவதரித்த பூவிருந்தவல்லி என்ற பூந்தமல்லி, எம்பெருமானால் கற்பிக்கப்பட்ட வைணவ பாதைகளையும், காத்து வந்த கீழ்க்கண்ட ஆச்சார்ய புருஷர்களையும் இவ்வுலகிற்குத் தந்தருளியதும் இத்தொண்டை மண்டலம் தான். 1. எம்பார் அவதரித்த மதுரமங்கலம் 2. முதலியாண்டார் அவதரித்த பேட்டை எனப்படும் வரதராஜபுரம் 3. கூரத்தாழ்வான் அவதரித்த கூரம் இவர்கள் மட்டுமென்ன எங்களுக்கும் பங்கில்லையா என்று இம்மண்டலத்தின் ஊடே பாய்ந்து இதன் செழுமைக்கும் சிறப்புக்கும் மெருகேற்றும் நதிதேவதைகள் நால்வருண்டு. 1. சக்ஷிர நதி எனப்படும் பாலாறு 2. பாகு நதி எனப்படும் செய்யாறு 3. வேகவதி எனப்படும் சரஸ்வதி நதி 4. கமண்டல நதி எனப்படும் கம்பா நதி. இப்பேர்ப்பட்ட தொண்டைமண்டலத்தின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். மற்ற மண்டலங்களைவிட இம்மண்டலம் மிகு புகழ் படைத்துள்ளதென்றால் அது மிகையன்று. இனி உள்புகுந்து எம்பெருமான்களின் திவ்ய தேசங்களில் உலா வரலாம். |