பக்கம் எண் :

282

     16) இந்த காஞ்சி பூர்ணரை ஆச்சார்யராகக் கொண்ட இராமானுஜர்
அவரிடம் கீழ்க்காணும் நான்கு கேள்விகளைத் தம் பொருட்டுக் கேட்டார்.

     1. உபாயங்களில் எது நல்லது
     2. மோட்சம் அடைவதற்கு முன் அந்திமஸ்ருதி வேண்டுவது
        எப்போது
     3. எந்த ஜென்மத்தில் மோட்சமடைவது
     4. எந்த ஆச்சார்யரை நான் ஏற்றுக் கொள்வது

     இக்கேள்விகளை இராமானுஜர் கேட்பதாக திருக்கச்சி நம்பிகள்
தேவப்பெருமாளான வரதரிடம் கேட்க அவர் 6 வார்த்தைகள் பதில்
கூறுகிறார்.

1. அஹம் மேவபரம்தத்வம்

     நானே, ஸ்ரீமந் நாராயணனே உலகிற்கும், உலக காரணிகட்கும்
தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்

2. தர்சனம் பேத ஏவச

     ஜீவாத்மா, பரமாத்மா (ஜீவன்-ஈஸ்வரன்) இரண்டும் வெவ்வேறானவை.

3. உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்

     பகவானை அடைய (மோட்சம் அடைய) சரணாகதியே சிறந்தவழி.

4. அந்திமஸ்மருதி வர்ஜனம்

     அந்திமகாலத்தில் பெருமாளை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை.

5. தேக வஸானே முக்தில் ஸ்யாத

     என்னை உபாயமாகக் கொண்ட இத்தகைய பக்தர்கட்கு இந்தவுடல்
கழிந்தவாறே (இப்பிறவி முடிந்ததும்) மோட்சம் நானே அருளுகிறேன்.

6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

     நற்குண பண்டிதராய் இருக்கும் மகா புருஷரான பெரிய நம்பியை
ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது.

     இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் திருநறையூரான் ஈடுபாடு
கொண்டதுபோல ஸ்ரீஇராமானுஜரிடம் வரதராஜன் ஈடுபாடு கொண்டு அவருக்கு
வழிகாட்டினார்.