பக்கம் எண் :

290

     - என்ற பாடலால் படம் பிடித்துக் காட்டுகிறார்.

     12) திருமங்கையாழ்வார் இப்பெருமானுக்கு அருளிய 10 பாசுரங்களில்
பெருமானின் சிறப்பியல்புகளைப் பற்றிக் கூறி, அவதாரங்களையும் நினைவு
கூர்ந்து யாரிவர், யாரிவர் என்று வினவுவது மிகவும் ஆழ்ந்து ரசிக்கத்
தக்கதாகும்.

     13) பிள்ளைப் பெருமாளையங்காரின் 108 திருப்பதியந்தாதியில்
இப்பெருமானைக் கண்ணனாக காண்கிறார்.

     எப்போதும் துயருற்று இருக்கிறீர்களே உங்கள் துயரத்தை தொலைமின்.
இளம்வயது எதற்கும் பயப்படாதவயதாகும். இளங்கன்று பயமறியாது என்று
கூறியிருப்பதும் தங்கட்கும் தெரியவில்லையா தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
நீங்களும் கண்ணனின் சரித்திரத்தை அறிந்திருப்பீர்கள் அல்லவா? அதில்
அவன் பயங்கரமான காளியங்கன் என்னும் பாம்பினை அடக்கினான். யாரும்
நெருங்குவதற்கு கூடப் பயப்பட்டுக் கொண்டிருந்த காளிங்கன் அருகில்
இளங்கன்று பயமறியாது என்பது போல துள்ளிக் குதித்து காளிங்கன்
கொட்டத்தை அடக்கிய கண்ணனின் திருவடிகளைச் சேவியுங்கள். நீங்களும்
இளங்கன்று போல் துள்ளிக் குதித்து களித்திருங்கள் அந்த திருவடிகளைக்
கொண்ட கண்ணபிரான்தான் அட்டபுயக்கரத்தோடு இங்கு உள்ளான்.
அவனைத் தரிசித்து அச்சத்தை தொலைத்து இளமை பெற்றுத் திகழுங்கள்.
அட்டபுயக்கரத்தானே சரணமென்று வாருங்கள் என்று கூறுகிறார்.

     இதைத்தான் ஆழ்வாரும் ‘வன்புகழ் நாரணன் தின் கழல் சேர்மின்’
என்றாரோ. இதைத்தான் வேதமும் ‘அதேபோபயம் கதோபவதி’ என்கிறது.
 

இப்போது பாடலைப் பாருங்கள்,

     என்றுள் துயருழக்கு மேன்புகாள் நீங்களிளங்
          கன்று போல் துள்ளிக் களித்திரீர், அன்று நட
     மிட்ட புயங்கத்திரு சரணமே சரணென்று
          அட்ட புயங்கத்திற் காளாய்

     என்று கண்ணனாய் காண்கிறார்.