45. திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)
முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்தனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே திருநெடுந்தாண்டகம் 14 - (2065) |
என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. அட்ட புயக்கர சன்னதியிலிருந்து
மேற்குத் திக்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.
வரலாறு
இத்தலம் பற்றி பிரம்மாண்டபுராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது
துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட பிரம்மன்
தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை துவக்கினான்)
பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ
முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன
செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில்
மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச்
செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள்.
திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால் உணர்ந்த
பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார்.
உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி
நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை
தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த
தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில் வைத்தார்
ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான் பிரம்மன்.
யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன் விஸ்வகர்மாவை
நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா யாக சாலையை மிக நுட்பம்
வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன்