வருந்தி, திருவிக்ரம அவதாரத்தைக் காட்டியருள வேண்டுமென பாதாள லோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர். பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக என்னால் தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி தரும்பொருட்டு இந்த இடத்திற்கு அருகிலேயே ஆதி சேடனாக காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும். ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம் என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இங்கு எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப் பேரெழில் பொருந்தியவர் இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன் ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு ஊரகத்தான் ஆயிற்றார் போலும். மூலவர் உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் அமுதவல்லி நாச்சியார் உற்சவர் பேரகத்தான் தீர்த்தம் நாக தீர்த்தம் விமானம் ஸார ஸ்ரீகர விமானம் காட்சி கண்டவர்கள் மகாபலிச் சக்ரவர்த்தி, ஆதிசேடன். சிறப்புக்கள் 1. பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் நான்கு ராஜ |