வீதிகட்கு மத்தியில் அமைந்துள்ளது இத்தலம். ஊரகம் (பேரகம்) இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசம்தான் “மதில் கச்சி யூரகமே பேரகமே” என்பது சிறிய திருமடலில் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம். 2. இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப் பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம். இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர். 3. இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும் காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது (பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம் பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம். 4. திருமழிசையாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். 5. நம்மாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று ஆன்றோர் மொழிவர். நின்றவாறும், இருந்தவாறும், கிடந்தவாரும் நினைப்பிரியன ஒன்றாலா வுருவாய அருவாய நின் மாயங்கள் | |