நின்று நின்று நினைக்கின்றேன் உன்னையெங்ஙனம் நினைக்கிற்பின் பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகுமுண்ட வொண்சுடரே | என்ற பாசுரத்தில் நின்றவாறும் என்ற மங்களாசாசனத்தை இத்தலத்திற்கிட்ட மங்களாசாசனமாய் கொள்வர். நின்றவாறும் - திருவூரகத்தில் நின்றபடியை ஆதல் என்பது நம்பிள்ளை ஈடு 6. இந்த ஒரு திவ்ய தேசத்திற்குள்ளாகவே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திவ்ய தேசங்கள் இருப்பதால் இத்தலத்தை தரிசித்தால் நான்கு திவ்ய தேசங்களைத் தரிசித்ததாகி விடும். 7. ஊரகம், நீரகம், காரகம், கார் வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். 8. பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில் இத்தலத்திற்கான பாசுரங்களை இட்டருளினபோது, மகாபலியிடம் எம்பெருமான் மூன்றடி மண்வேண்ட மகாபலி நீர்வார்த்து (தாரை வார்த்துக்) கொடுத்ததை நினைவூட்டுகிறார். நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த வாசத்தாள் என்தலைமேல் வைத்திலையேல் - நாகத்தால் பாரகத்துள்ளன்றி நான் பாழ்நரகில் வீழ்ந்தென் சொல் ஊரகத்துள் நின்றாயுரை | மாவலி தாரை வார்த்துக்கொடுத்தபோது ஈரடியால் உலகளந்து மூன்றாவதடியை அவன் தலைமீது வைத்து நின்திருவடியை அவனுக்குப் பொலியச் செய்தல் போன்று என் சென்னியின் மேலும் வைப்பாயாயென்று கேட்கிறார். “திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய்” என்று ஆழ்வாருரைத்தபடி தமக்குமாகட்டும் என்கிறார். |