பக்கம் எண் :

316

51. திருவெஃகா

     இசைந்த வரவமும் வெற்புங் கடலும்
          பசைந்தாங் கமுது படுப்ப - அசைந்து
     கடைந்த வருந்தமோ கச்சி வெஃகாவில்
          கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு
                   (2345) மூன்றாந்திருவந்தாதி 64

     என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் காஞ்சி வரதராஜப்
பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயக்ரப் பெருமாளின் சந்நிதிக்கு எதிரில்
அமைந்துள்ளது. தேரடிக்கு மிகவும் சமீபம்.

வரலாறு

     பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் பற்றி பேசப்படுகிறது.

     பலவிதமான தடைகளையும் மஹாவிஷ்ணுவின் பேரருளால்
உடைத்தெறிந்த பிரம்மன் யாகத்தை தொடர்ந்து நடத்தினார். எத்தனை முறை
தொடர்ந்தாலும் அத்தனை தடவையும் துன்பம் தந்து யாகத்தை தடுக்க
நினைத்த சரஸ்வதி இம்முறை பொங்கிவரும் பெரும் நதியாக மாறி
வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். வேகமாக வந்ததால் வேகவதி எனப்
பெயருண்டாயிற்று.

     பிரம்மா செய்த பரிவேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத்
தடுக்க அதற்குக் குறுக்கே எம்பெருமான் அணையாகப் படுத்துக்கொண்டான்.
எம்பெருமான் படுத்திருந்த திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதி முன்னேறிச்
செல்ல வொண்ணாமல் பின் வாங்கினாள். இதனால் வேகாஷேது என்று
பெயர் பெற்றாள். தமிழில் வேகவனை என்றானது. இச்சொல் நாளடைவில்
வேகனை என்று திரிந்து பிறகு வேகினி என்றாகி வெஃகின என்றாகி
வெஃகணையானது. காலப்போக்கில் வெஃகா என்றாயிற்று.

     தாம் யாகம் செய்யும் பகுதியை நோக்கி ஒரு பெரும் நதி
வருவதையறிந்த பிரம்மன் வழக்கம் போல் தன்னையும் தம் யாகத்தையும்
காக்க திருமாலைத் துதித்தான். திருமால் அவ்வெள்ளத்திற்கு எதிரே
அணையாகப் படுத்தார். திருமாலின் அறிதுயில் கோலத்தைக் கண்ணுற்ற
சரஸ்வதி தனது வேகத்தை சுருக்கி தன்னை மறைத்துக் கொண்டாள். சரஸ்வதி