மறையலுற்றதும் திருமால் தனது தேவியுடன் பிரம்மாவுக்கு காட்சி கொடுக்க பிரம்மன் யாகத்தைத் தொடர்ந்தார். மூலவர் யாதோத்தகாரி. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கிய திருக்கோலம். தாயார் கோமளவல்லி நாச்சியார் தீர்த்தம் பொய்கை புஷ்கரிணி விமானம் வேதஸார விமானம் காட்சி கண்டவர்கள் பிரம்மதேவன், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், கணி கண்ணன், சரஸ்வதி தேவி. சிறப்புக்கள் 1. பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால் பொய்கையாழ்வாரானார். 2. எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார். இதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அ) திருமழிசையாழ்வார் இத்திவ்ய தேசத்தில் சில காலம் தங்கி இருந்தார். அவருக்கு கணிகண்ணன் என்னும் சீடன் ஒருவன் இருந்தான். பேராற்றலும் பெரும் பக்தியும் கொண்ட கணிகண்ணன் எம்பெருமான் மீது நித்தமும் கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தான். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் தன்னைக் குறித்து ஒரு பாடல் புனையுமாறு கணிகண்னைக் கேட்க திருமாலைத் தவிர்த்து பிற தெய்வத்தைப் பாடாத நான் மானிடரைப் பாடமுடியுமா. இச் செந்நாவின் இன் கவி பெருமாளுக்கு மட்டுமே, நான் மானிடரைப் பாடமாட்டேன் என்றார். இதைக் கேட்டு சினந்த மன்னன் கணிகண்ணனை நாடுகடத்த உத்திரவிட்டான். கணிகண்ணனுக்கு நேர்ந்ததைச் செவிமடுத்த திருமழிசையாழ்வார் தாமும் கடக்கத் தயாரானார். இருவரும் நாடு கடந்து செல்ல எத்தனிக்கையில் |