பெருமாளை மட்டும் விடுத்துப் போவரோ, நீங்க வொன்னா இன்பம் பூண்ட பெருமாளிடம் வந்தார் திருமிழிசை. பெருமானின் எதிரில் நின்று கச்சி மணிவண்ணா, கனி கண்ணன் போகின்றான். எனவே நானும் உடன் செல்லத் துணிந்தேன். நீயும் இங்கு கிடக்க வேண்டாம். விஷமுடைய பாம்பினை படுக்கையாகக் கொண்டு படுத்திருப்பவனே நீயும் உந்தன். (பாம்பும்) பாயைச் சுருட்டிக்கொள் என்றார். கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள் - என்றார் | எம்பெருமானும் சரேலென தமது பாயைச் சுருட்டிக் கொண்டு தொண்டர்களைப் பின் தொடர்ந்தார். இம்மூவரும் ஊரின் எல்லையைக் கடந்ததும் மன்னனின் அரசவையில் துர்நிமித்தங்கள் தோன்ற ஆரம்பித்தன. அரண்மனையில் அதிர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. நகரமே இருண்டு போனது. உடனே மன்னன் மந்திரி பிரதானிகளை அழைத்து வினவ நிலைமை இதுவென்று தெரிந்தது. உடனே தவறுணர்ந்த மன்னன் அவர்கள் சென்ற திக்கினைக் கேட்டுப் பின் தொடர்ந்து ஓடலுற்றான். ஓரிடத்தில் மூவரையுங்கண்டு தெண்டணிட்டு விழுந்து மன்னிப்புக்கேட்டு மீண்டும் காஞ்சிக்கே எழுந்தருள வேண்டுமென்று மன்றாடினான். இந்நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றுமுடிய ஓர் இரவும் ஒரு பகலும் ஆயிற்று. சித்தம் மாறிய கணிகண்ணன் திருமழிசையைப் பணிந்து நின்றான். பக்தனின் பொருட்டு பெருமாள் எதையுமே செய்வார். என்றறிந்த திருமிழிசை மீண்டும் தம்முடன் வந்த பகவானை நோக்கி கணி கண்ணன். போவதை விட்டுவிட்டான். நானும் அவ்வாறே ஆனேன். நீயும் போக்கொழிந்து உன் பாய் விரித்துக்கொள்ள வேண்டுமென்றார். |