பக்கம் எண் :

324

தொழிலாகக் கொண்டு திகழ்வர் “உற்றதும் உன்னடியார்க் கடிமை” யென்று
ஆழ்வார் கூறிய நிலையில் இருப்பர்.

     தம்மைவிட சிறந்த வைணவர்களைக் கண்டால் ‘எற்றே இவர்க்கு
நாமின்று’ என்று அவர் பெருமைக்கு முன்பு தம்மைத் தாழ்த்திப்
பணிந்துகொள்வர்.

     இத்தகைய அடியார்கட்கான அறிவு, குலம், தொழில் எல்லாம் தருவது
காரகத்தான்தான் என்பதும் இந்த அந்தாதிப்பாவின் அரும்பொருளாகும்.

     5. தனித்த பாசுரம் இன்றி ஒரு சொற்றொடராலே திருமங்கை
இப்பெருமானை மங்களாசாசித்துள்ளார். இப்பெருமை மற்ற ஆழ்வார்களைவிட
திருமங்கைக்கு மட்டுமே சாலவும் பொருந்தும்.

     அதாவது ஒரு திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்து
கொண்டிருக்கும்போதே திருமங்கைக்கு வேறு ஒரு திவ்ய தேசத்து
எம்பெருமானின் நினைவு வந்து விடுகிறது. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என
திவ்ய தேச நினைவுகள் சங்கிலித் தொடர் விளைவு போல நினைவலைகளில்
நீந்துகின்றன. இதில் எங்கே இப்பெருமானை விட்டுவிடுவோமோ
வென்றெண்ணி விடாதிருக்கும் பொருட்டே சொற்றொடர் மங்களாசாசனத்தை
நல்குகிறார்.

     எனவே தமது நினைவுக்கு வரும் திவ்ய தேசத்து எம்பெருமான்களை
ஒருவர்பின் ஒருவராக தொடர் மங்களாசாசனம் செய்துவிடுகிறார்.
திருமங்கையாழ்வார் திவ்ய தேசங்களில் திளைத்து ஈடுபடுவதை எளிதில்
விளக்கிவிட முடியாது. இதனாற்றான் இவரை முன்னோர்கள் ஆத்மாவை
வெய்யிலில் வைத்து உடலை நிழல் வைத்து வளர்த்தவர் என்று
மொழிந்துள்ளார்.

     அதாவது எந்நேரமும், எப்போதும் இவரது ஆத்மா திவ்ய தேசங்களின்
திருவாசல்களிலேயே சஞ்சரித்துக் கொண்டே இருந்ததால் ஆத்மாவை
வெயிலில் வைத்து என்றனர். அதாவது ஒரு திவ்ய தேசத்தை சேவித்துக்
கொண்டே இருக்கும்போது இவரது ஆத்மா இன்னொரு திவ்ய தேசத்தின்
திருமுற்றத்தில் பெருமாளோடு சம்பாஷணையில் இருக்குமாம்.

     எம்பெருமானின் திவ்யதேசங்கட்குத் தொண்டு செய்வதற்கா கவே தமது
சரீரத்தைச் சரீர பலத்தை செலவழித்ததால் உடலை நிழலில் [திவ்ய தேசத்து
மதில்