பக்கம் எண் :

333

     அல்லது காமாட்சிக்கு அருள்பாலித்ததால் எம்பெருமானுக்கு
இவ்விடத்திலேயே ஒரு ஸ்தலம் உண்டாகி காலப்போக்கில் பெருமாள் வழிபாடு
குறைந்து காமாட்சியம்மன் ஸ்தலம் பிரசித்தி பெற்றதால் இன்றைய நிலையை
எய்திருக்கலாம். மேலும் சமய ஒற்றுமை கருதியும் காமாட்சியும், லட்சுமியும்
ஒருங்கே சேர பெருமாள் காட்சிகொடுத்தார் எனக்கொண்டு சமயப் பொறைக்கு
இவ்விதம் அமைக்கப்பட்டதென்றும் கொள்ளலாம். இதுபோன்ற
காரணங்களால்தான் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார் எனக்
கொள்ளலாமே தவிர திருமங்கையின் மங்களாசாசனத் தலம் இதுதான் என்று
அறுதியிடமுடியாது.

     புராணம் கூறும் நாச்சியாரும், புஷ்கரணியும், விமானமும் தற்போது
அங்கு இல்லை. பெயரும் இடமும் பெரும் பேதுற்றுத் திகழும் இந்த இடம்
(இத்தலம்) ஆழ்வாரால் பாடப்பட்ட திவ்யதேசமன்று எனத் துணிவுறக்
கூறலாம்.

வரலாறு

     ஒரு சமயம் சிவனுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் உண்டாகி விவாதம்
வளர அதனால் சினமுற்ற சிவன் பார்வதியை சபிக்க பார்வதி சிவனிடம்
மன்னிப்பு வேண்ட சிவ கட்டளைப்படி பார்வதி ஒரு காலால் நின்று
வாமனரை நோக்கித் தவம் செய்து சிவபெருமானை அடைந்ததாக ஐதீஹம்.

     இவ்விடத்தில் ஒரு சமயம் லட்சுமி தேவியும் பார்வதியும் சம்பாஷணை
செய்து கொண்டிருக்கையில் மஹாவிஷ்ணு மறைந்திருந்து கேட்டதாகவும்
இதையறிந்த காமாட்சி எம்பெருமானைக் கள்வன் என்று அழைத்ததால்
பெருமாளுக்கு இவ்விடத்தில் கள்வன் என்று திருநாமம் ஏற்பட்டதாயும்
கூறுவர்.

     இவ்விதம் காமாட்சி கூறியதைக் கேட்ட எம்பெருமான் தன்னை சற்றே
மறைத்துக்கொள்ள அந்நேரத்தில் இங்கு பலகாலமாக பதுங்கி இருந்து
(தனக்கேற்பட்ட சாப விமோசனத்தால்) வெளிப்பட்ட அரக்கன் ஒருவன்
இரண்டு தேவியரையும் அச்சுறுத்த பார்வதி உடனே திருமாலைத் துதிக்க
அந்த அரக்கனோடு எம்பெருமான் பொருதார்.

     அவன் படுத்துக்கொண்டே புழுதியை வாரி இறைத்து பயங்கரமாக
பொருத ஆரம்பிக்க எம்பெருமான் அவன் மீது நின்று அவன் துள்ளலை
அடக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தார் அந்நிலையில் அவன்
உக்கிரமாக ஆட அவன்மீது அமர்ந்து அவன் கொட்டத்தை முற்றிலும்
அடக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார்.

     அப்போது அவன் தனது முழுபலத்தையும் பிரயோகித்து அசைந்து
அசைந்து பூமிக்கு நடுக்கத்தை உண்டாக்க அவன் மீது