பக்கம் எண் :

334

படுத்து அவனை பாதாளத்திற்குள் அமுக்கி சயன திருக்கோலத்தில் காட்சி
கொடுத்தார்.

     இவ்விதம் இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த
என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளினார்.

     பார்வதியின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் தனது மூன்று
திருக்கோலங்களையும் இங்கே காட்டிக் கொடுத்ததாகவும் கூறுவர்.

     பிற ஸ்தலங்கட்குச் சொல்லப்பட்ட வரலாற்றுச் சான்றுகள்
அத்தலத்தோடு ஒட்ட நிற்பவை போல் தோன்றுகின்றன. ஆனால் இங்கு
பேசப்படும் ஸ்தல வரலாறுக்கும் பெருமான் திருக்கோலத்திற்கும்
சம்பந்தமில்லை.

     மேலும் பார்வதி தேவி வாமனரைக் குறித்து தவமிருந்ததாய்
கூறப்படுகிறது. ஆனால் காமாட்சியம்மன் கோவிலில் இருக்கும் மூர்த்தியோ
வராஹ மூர்த்தியாகும்.

மூலவர்

     ஆதிவராஹப் பெருமாள், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     அஞ்சிலை வல்லி நாச்சியார்

தீர்த்தம்

     நித்ய புஷ்கரணி.

விமானம்

     வாமன விமானம்

காட்சி கண்டவர்கள்

     பார்வதி, லட்சுமி தேவி.

சிறப்புக்கள்

     1. மிகச் சிறிய வடிவிலான மூர்த்தியாக 108 திவ்ய தேசங்களில்
எழுந்தருளியிருப்பது இங்கு மட்டும்தான்.

     2. காமாட்சியம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள
நின்றான். இருந்தான். கிடந்தான் என்ற மூன்று திருக்கோலத்தைக் காட்டி
மூன்றடுக்கில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களை உற்று நோக்கினால்
அவைகள் பல்லவர்கள் காலத்தில் படைக்கப்பட்ட கலைப் படைப்புக்களைப்
போலன்றி வேறெங்கோ இருந்து