பெயர்த்தெடுத்து இவ்விடம் கொணர்ந்து வைத்ததைப் போல் உள்ளது. இத்தலம் ஆய்விற்குரியது. 3. பல அழகு தமிழ்ப் பெயர்கள் பூண்டுள்ள நாச்சியார்களைப் போல இந்த பிராட்டிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியார் என்றும் அழகுத் திருநாமம். 4. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் 5. தனியாக சன்னதி. உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. நித்தியபடி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. 6. காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி அடையாமல் காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்றுகொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும் என்று ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு ஆழ்பொருள் சிந்தனைக்கு வித்திடுவதாகும். 7. அஷ்ட பிரபந்தம் என்னும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் அழகிய மணவாள தாசரான பிள்ளைப் பெருமாளையங்கார் கச்சிக் கள்வா நான் பெரிய கள்ளன், உனக்கு சொந்தமான இந்த ஆத்மாவை எனக்கே உரிமையாகச் செய்து கொண்டே வாழ்ந்து வருகிறேன். இது ஆத்மபகாரம் இதைக் காட்டிலும் பெருங்களவு வேறில்லை. அப்படிப்பட்ட என்னைக் கள்வன் என்று கூறாமல் மங்காத பண்புக் கடலாகிய உன்னைக் கள்வன் என்கிறார்களே இதுதான் விந்தை என்கிறார். பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று கொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர் புள்வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா வென் றோதுவதென் கண்டு. | |