55. திருப்பவள வண்ணம் (காஞ்சி)
வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய் கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி வரையினுச் சியாய் பவள வண்ணா எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே (2060) திருநெடுந்தாண்டகம் 9 |
திருமங்கையாழ்வார் இந்த ஸ்தலத்திற்கு வந்தார். எம்பெருமானின்
நிறம் சற்றே வித்தியாசமாக இருந்தது. ஈதென்ன விந்தை எட்டுக் கைகளுடன்
இருந்தவனை யாரிவர் என்று எண்ணி வியந்தோம், அட்ட புயகரத்தோர்
என்றார். ஆனால் இங்கு நிற்பவனை யார் என்று கேட்பது. இவனது
நிறமல்லவா வித்தியாசமாக தெரிகிறது. ஏற்கனவே நாம் இவன் என்ன
வண்ணத்தினன் என்று மயங்கி நின்றோம். இப்போது இந்த வண்ணம் வேறு
புது மயக்கம் தருகின்றதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். திருமங்கைக்கு
அர்ச்சாவதாரத்திலும் அவர் தம் வண்ணங்களிலும்தான் எத்துனை ஈடுபாடு,
எவ்வளவு ஆழ்ந்த மயக்கம்.
இப்பெருமான் கொண்ட வண்ணத்தை யோசித்துப் பார்க்கிறார். கடல்
மல்லையானின் நிறமாக இருக்குமோ, காஞ்சியூரானின் வண்ணமாக இருக்குமோ,
திருப்பேர் நகரானின் நிறமோ, பாற்கடலோன் வண்ணந்தான் இப்படி
தோன்றுகிறதோ ஒருவேளை பனிமலையின் உச்சியில் உள்ள திருப்பிரிதியான்
நிறமோ என்றெல்லாம் எண்ணி இவைகள் எல்லாம் அல்லவே என்று
யோசித்து நிற்கிறார். ஒருவேளை கலியுகத்தில் எம்பெருமான் கொண்ட
வண்ணமோ கலியுகத்தில் எம்பெருமான் வண்ணம் கருநீலமல்லவா இது
அதுவுமன்றே என்று எண்ணுகிறார்.
எம்பெருமானுக்கு நான்கு யுகங்கட்கும் நான்கு வண்ணங்கள்
சொல்லப்பட்டுள்ளதால் திருமங்கைக்கு இந்த வண்ண மயக்கு
உண்டாகிவிட்டது. எம்பெருமான்