பக்கம் எண் :

338

விமானம்

     ப்ரவாள விமானம்

காட்சி கண்டவர்கள்

     அச்வினி தேவதைகள், பார்வதி, பிரம்மன்.

சிறப்புக்கள்

     1. எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட
ஸ்தலம் இது ஒன்றுதான். எம்பெருமான் நான்குயுகங்களிலும்தான் கொண்ட 4
வர்ணங்களை இங்கு காட்டிக்கொள்வதாக ஐதீஹம்.

     இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர்
(மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று
எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும்
அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர்
கோவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து
நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம்.

     2. பச்சை வண்ணர் கோவிலை திருமங்கை மங்களாசாசனம்
செய்யவில்லை. இருப்பினும் இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரைச்
சேவித்துவிட்டு பச்சை வண்ணரையும் சேவித்துச் செல்வதையே மரபான
கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது
அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர்
பிரும்மரிஷிக்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

     3. இக்கோவில்கள் சென்னை ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ்
எனப்படும் அறக்கட்டளை நிர்வாகத்திற்குட்பட்டது. சுமார் நூறாண்டுகட்குமுன்
வைணவ சம்பிரதாயத்தில் இருந்த கரலபாடி ஆழ்வாரய்யாவின் கனவில்
தோன்றி பழுதுற்ற இத்தலங்களைப் புதுப்பிக்க எம்பெருமானே கட்டளை
இட்டதாகவும் செய்தி.

     4. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட
ஸ்தலம்.

     5. அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி
கொடுத்ததாக ஐதீஹம்.