திருமங்கையாழ்வார். தமது பாக்களில் எல்லாம் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் என்று அம்மன்னனுக்கும் இத்தலத்திற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார். 4. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 5. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர் ஆகியோரும் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளனர். 6. பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள் அவனுக்கு பெருமாள் சாஸ்திரங்களைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. 7. இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம் நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டுக் கல்லும் கதை பேசும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டுள்ளது. 8. இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். சுரங்கப் பாதையைத் தோண்ட வந்த வெள்ளையன் இங்கு அவ்வாறு சுரங்கப் பாதை யாதும் இல்லையெனக் கூறிச் சென்று விட்டதாகக் கூறுவர். 9. இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக ஐதீஹம். |