பக்கம் எண் :

358

59. திருவள்ளூர் (திரு எவ்வுள்)

     தையலாள் மேல் காதல் செய்த
          தாளவன் வாளரக்கன்
     பொய்யிலாத பொன்முடிக
          ளொன்ப தோ டொன்றும் அன்று
     செய்த வெம்போர் தன்னிலங்கோர்
          செஞ்சரத் தாளூருள
     எய்த வெந்தை யெம்பெருமா
          னெல்வுள் கிடந்தானே (1059)
                       பெரியதிருமொழி 2-2-2

     இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில்
கிடக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும் இவ்வூர்
வழியாகவே செல்கின்றன. மிக விரைந்து வளர்ந்து கொண்டிருக்கும்
பிரதானமான நகரமாகத் திகழ்கிறது இந்நகரம்.

வரலாறு

     இத்தலம் பற்றி மார்க்கண்டேய புராணத்தின் 100 முதல் 111 வரையிலான
அத்தியாயங்களில் பேசப்பட்டுள்ளது.

     கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர்
ஒருவர் தமது மனைவியுடன் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டிசாலியக்ஞம்
என்னும் பெயர் கொண்ட யாகம் தொடங்கி சாலி எனப்படும் நெல்மணிகளால்
அந்த யாகத்தைச் செய்தார்.

     யாகத்தின் முடிவில் யாக குண்டலியில் தோன்றின மகாவிஷ்ணு
மஹாபுருஷரே உமது யாகத்தை மெச்சினோம் நீர் வேண்டின வரம்
கேளுமென்ன, புத்திர பாக்கியம் கருதியே யாம் இந்த யாகம் துவங்கியதாகவும்,
தமக்குப் புத்திரப் பேறு வேண்டுமென்றும் கேட்க அப்படியே உமக்குப்
புத்திரப் பேறு அளித்தோம், நீர் சாலியக்ஐம் செய்து புத்திரப்பேறு
பெற்றபடியால் உமக்குப் பிறக்கும் புத்திரன் சாலிஹோத்ரன் என்ற பெயருடன்
பிரசித்தி பெற்றுத் திகழ்வான் என்று கூறியருளினார்.

     அவ்வாறே பிறந்து வளர்ந்த சாலி ஹோத்ரரும் தக்க பருவமும்,
ஞானமும் எய்திய பிறகு தீர்த்த யாத்திரை