பக்கம் எண் :

360

மூலவர்

     வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக
மண்டலம்.

தாயார்

     கனக வல்லி (வஸு மதி தேவி)

உற்சவர்

     மூலவருக்குரைத்ததே

விமானம்

     விஜயகோடி விமானம்

தீர்த்தம்

     ஹ்ருத்தபாப நாசினி

காட்சி கண்டவர்கள்

     சாலிஹோத்ர முனிவர் (மது, கைடபன்)

சிறப்புக்கள்

     1. இச்ஷேத்திரத்திற்கு வீச்சாரண்யச் ஷேத்ரம் என்றும் இங்கு
செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால்
புண்யாவார்த்த ஷேத்ரமென்றும் எவ்வுள்ளுர் என்றும் இத்தலத்திற்குப் பல
திருநாமங்களமைகின்றன.

     2. சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட
எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலெட்சுமி வஸு மதி என்ற பெயரில்
தர்மசேன புரம் என்னும் நாட்டையாண்ட திலிப மகாராஜாவுக்குப் புத்திரியாக
அவதரித்து வாழ, இவ்வெம்பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன்
வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக வரலாறு.
கனகவல்லித் தாயார் என்றும் திருநாமம் உண்டு. அதற்கு முன் கிங்கிருஹேசன்
(எவ்வுள் கிடந்தான்) என்பதே பிரதானம். இங்கு கனகவல்லித் தாயாருக்குத்
தனிச் சன்னதி உண்டு.

     3. திருமழிசையாழ்வாரால் ஒருபாடலாலும் திருமங்கையாழ்வாரால்
பத்துப் பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.