என்னுடைய இன்னமுதை, எவ்வுள் பெருமலையை என்று தமது பெரிய திருமடலில் திருமங்கை மயங்கி நிற்பார். திருவேங்கடவனுக்குள்ள சுப்ரபாதம் போன்று இப்பெருமானுக்கும் வீரராகவ சுப்ரபாதம் உண்டு. ஸ்ரீகிங்கிருஹேசஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று யாத்துள்ளார். 4. வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்திகொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார். ‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனேபோற்றி நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி வேண்டவ ரெவ்வுள்ளூர்வாழ் வீரராகவனே போற்றி’ | என்பது இராமலிங்க அடிகளாரின் பாக்களில் ஒன்றாகும். 5. இத்தலம் புத்திரப் பேறளிக்கும் தலமாகவும், திருமணமாகாதவர்கள் வேண்டிக்கொண்டால் திருமணம் சித்திக்கும் தலமாகவும், எத்தகைய கொடூர நோயாளியும் இப்பெருமானை மனமுருகவேண்டி இங்குள்ள ஹ்ருத்த பால நாசினியில் நீராடி நோய் நீங்கப் பெறுவதால் நோய் நீக்கும் ஸ்தலமாகவும், ஒரு பெரிய பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இப்பெருமானை வேண்டினோர்க்கு நோய் நீங்கப்பெறுவது கண்கூடு. எனவே இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு. 6. சகல பாபங்களையும் போக்கும் பாபநாசினியாகத் திகழ்கிறது இத்தலம். அமாவாசையன்று இதில் நீராடுவது சகல பாபங்களையும் போக்குமென்பது ஐதீஹம். தை அமாவாசையன்று இங்கு பெருந்திரளாக பக்தர்கள் கூடியிருந்து நீராடுவர். ஹிருத்த, இருதயத்தில் உள்ள, பாபநாசினி- ாபங்களை நாசம் செய்யவல்லதால் இத்தீர்த்தத்திற்கு ஹ்ருத்த பாபநாசினி என்னும் பெயருண்டாயிற்று இத்தீர்த்தமும் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும். 7. தூய்மையான பக்தர்களுக்கருள்வதில் இப்பெருமானின் பாங்கு மிளிர்வதை பின்வரும் கதையால் உணரலாம். |