5. இக்கோவிலின் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டதென்பது திருமங்கையாழ்வாரின் பாடலினால் தெளிவுறும் விஷயமாகும். மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர்கோன் செய்த நன்மயிலைத் திருவல்லிக்கேணி....1077 என்கிறார் | 6. திருமயிலை எனப்படும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் ஒரு காலத்தில் ஒரே ஊராகக் குறிக்கப்பட்டன. மயிலை சிவஸ்தலம். அல்லிக்கேணி விஷ்ணு ஸ்தலம். மயிலைத் திருவல்லிக்கேணி என்பதே திருமங்கையின் அமுதவாக்கு அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை உடையமையால் திருவல்லிக்கேணி என்ற பெயருண்டாயிற்றென்பர். 7. ‘பார்த்தன் தன் தேர்முன் நின்றானை’ இத்தலத்துக் கண்டேனென்றும், ‘தெள்ளிய சிங்கமாகியத் தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனென்பதும்’ திருமங்கையின் பா உரைக்கும் அவதார நினைவூட்டுகளாகும். 8. முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம். 9. 108 திவ்ய தேசங்களிலே தான் வளர்ந்த குலவழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்றுதான். 10. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், திரிந்துழலும் சிந்தைதனிச் செல்வே நிறுத்திப் பரிந்து புகன்மின் புகன்றால் - மருந்தாங் கருவல்லிக் கேணியாம் மாக்கதிக்கு கண்ணன் திருவல்லிக் கேணியான் சீர் | சாதாரண போகங்களிலே திரிந்து உழன்று கொண்டிருக்கும் சிந்தையை நிறுத்தி திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே வாழும் வேங்கட கிருஷ்ணனாகிய கண்ணனின் புகழை விரும்பிப் பாடும் தொழிலைச் செய்க. கருவல்லியாகிய - கர்ப்பமாகிய கொடியை அறுக்கும் மருந்தாகும் என்கிறார். |