பக்கம் எண் :

369

61. திருநீர்மலை

     அன்றாயர் குலக்கொடி யோடனிமா
          மலர் மங்கை யொடளப்பளாவி, அவுணர்க்
     கென்றானு மிரக்க மில்லாதவனுக்
          குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ்
     நன்றாய புனல் நறையூர் திருவா
          லிகுடந்தை தடந்திகழ் கோவல் நகர்
     நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்
          கிடம் மாமலையாவது நீர்மலையே (1078)
                          பெரியதிருமொழி 2-4-1

     நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்ற நான்கு திருக்கோலங்களில்
திருநீர்மலையில் பெருமாள் காட்சி தருகிறார். நறையூர் எனப்படும் நாச்சியார்
கோவிலில் நின்ற வண்ணத்தில் உள்ளான். திருக்குடந்தை என்னும்
கும்பகோணத்தில் சயன திருக்கோலத்தில் உள்ளான். திருவாலி திவ்ய
தேசத்தில் அமர்ந்த நிலையில் உள்ளான். திருக்கோவலூரில் உலகளந்த
பெருமாளாகி நடந்த திருக்கோலத்திலுள்ளான். இந்த திருக்கோலங்களெல்லாம்
ஒரு சேரக் காட்சி கொடுக்கின்றான் திருநீர் மலையில். அவன்தான் அவுணர்
எனப்படும் இராக்கதர் குழாங்களையெல்லாம் அழித்து ஆயர்குல மகளோடு
உள்ள கண்ணபிரான், என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட இத்தலம். சென்னைக்கு அருகாமையிலுள்ள பல்லாவரம் என்னும்
ஊரிலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது
சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன.

வரலாறு.

     பிர்ம்மாண்ட புராணம் மற்றும் வடமொழி நூல்களில் இத்தலம் பற்றிப்
பேசப்படுகிறது.

     இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும், இத்தலம்
அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது.
இத்தலம் “ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்” அதாவது தானாகவே தோன்றிய
தலமாகும். முக்தி அளிக்கும் 8 தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற ஏழு
ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு

     1. திருவரங்கம்  2. ஸ்ரீமுஷ்ணம்
     3. திருப்பதி    4. சாளக்கிராமம்