வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார். அர்ச்சாவதாரத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு எல்லை காட்ட முடியுமா. கடல் நீர் கண்டு களிக்க முடியுமேயன்றி உண்டு உய்ய முடியாது. ஆற்று நிரோவெனில் வற்றும், பெருகும். அதன் மருங்கேயே காலம் முழுவதும் வாழ்தலுமரிது. குளங்குட்டைகளில் உள்ள நீரெனில் பருவகாலம் முடிந்ததும் வற்றி போகும். அடுத்த பருவத்திற்கு அவை காத்து நிற்கும். ஊற்று நீரெனில் எங்கு ஊற்றுள்ளது என்று தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் நன்னீர் ஊற்றாக அமையுமென சொல்ல முடியாதே. கிணற்று நீரென்றால் வேண்டும். போதெல்லாம் முகந்து கொள்ளலாமே. கிணற்றில் நீர் வற்றினும் ஆழப்படுத்திக் கொள்ளலாமே. அதுபோன்றதல்லவா எம்பெருமானின் நிலைகள். அதாவது கடல்நீர் போன்றதே பரம். ஆற்றுநீர் போன்றதே வ்யூகம். குளத்து நீர் போன்றதே விபவம் ஊற்று நீர் போன்றது அந்தர்யாமித்வம். கிணற்று நீர் போன்றதல்லவா அர்ச்சாவதாரம். வேண்டிய பொழுதெல்லாம் சேவித்து ஆத்மதாகம் தீர்க்கப் பெறலாமே. எம்பெருமான் கோபமாக இருந்தால் கூட பக்தி யென்னும் கயிற்றால் கட்டி இழுத்து விடலாமே. (அர்ச்சாவதாரமான அதிபோக்யமான வஸ்து நமக்கு எளிதில் கிடைத்திருக்க, அதைவிட்டு கிட்டுதற்கரிய பரஸ்வ ரூபத்தை ஏன் அனுபவிக்கத் துடிக்க வேண்டும்) “ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது சென்று விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார். தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு பெருமாளைக் கண்குளிரக் கண்டு பாக்களை மங்களாசாசனமாய் பொழிந்தார். திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும், காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக அறிய முடிகிறது. திருமங்கை கூட தனது பாசுரத்தில் |