பக்கம் எண் :

372

     காண்டா வன மென்பதோர் காடமரர்க்
     கரையானது கண்டவன் நிற்க... (1079)

என்றே கூறுகிறார்

     இத்தலம் பற்றி பிர்ம்மாண்ட புராணம் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது.

     இந்த தலத்தில் ஒரு நாள் செய்யும் புண்ணியகாரியம் மற்ற ஸ்தலங்களில்
100 ஆண்டுகள் செய்வதற்கு சமம். வெகுதூரத்திலிருந்து இந்த தோயாத்ரி
மலையைத் தரிசித்த மாத்திரத்திலேயே பாவங்கள் மறைகின்றன.
சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக ஏற்பட்டதால் உலகத்தில்
மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை
சேவித்துக் கடைத்தேறுகின்றன.

     தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில்
இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ
முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

1. மலைஅடிவாரக் கோவில்

மூலவர்

     நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     அணிமாமலர் மங்கை தனிக்கோவில் நாச்சியார்

2. மலைமேல் உள்ள கோவில்கள்

மூலவர்

     சாந்த நரசிம்மன் அமர்ந்த திருக்கோலம் பிராட்டியை இதயத்தில்
ஏற்றுள்ளார். ரங்கநாதன் சயன திருக்கோலம் திரிவிக்ரமன் (நடந்த மற்றும்)
நின்ற திருக்கோலம்

தீர்த்தம்

     மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த
புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி.

விமானம்

     தோயகிரி விமானம்

காட்சி கண்டவர்கள்

     தொண்டைமான், வால்மீகி.