பக்கம் எண் :

38

     கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று. 7 மதில்களும்,
எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்
இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ள
கருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்கு
பெரிய பிராட்டி என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய
அவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்று
பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள்
என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்
கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.
இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே
பெரிய நதிகள். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய
மங்களாசாசனங்கள். ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247
பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள். இராமாயண
காலத்திற்கும் முற்பட்டு, இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால் இவரின்
தொன்மை பற்றி ஆராய்வது பெரிய ஆய்வு. அப்பேற்பட்ட தொன்மையான
பெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால்
அது பெரிய விஷயம். அம்மம்மா இங்கு எல்லாமே பெரியவைகள்.

     11) திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக
திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும் தென்
திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். ஒருநாள் திருவரங்கப்பனுக்கு
ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர் தென் காவிரியில்
திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு
செல்ல வந்து கொண்டிருக்கும் போது தென் காவிரிக் கரைமீது நின்று
கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். இவரைக்
கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க
என்று