புள்ஆர் பெண்ணை புலம்பு மடற் செல்லாது கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் பைபயத் தோன்றும் நீர்ப்பெயற்று எல்லைப் போகி - என்ற பாடலில் நீர்ப்பெயற்று | நீர்ப்பாயற்று - நீர்ப்பாயலை உடையது (நீர்ப்பாயல்-சலசயனம் என்னும் கோயிலேயாகுமென) ஆராய்ச்சியாளர் குறித்துச் சென்றுள்ளனர். சங்க காலத்திலேயே சலசயனம் என்னும் சொல் அக்கால தமிழ்ச்சொல்லான நீர்ப்பாயல் என்றே குறிக்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை விளங்கும். சங்க காலத்தில் மட்டுமல்ல ஆழ்வாரும் இதே நீர்ப்பாயல் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார். தூயனாயு மன்றியும் சு ரும்புலாவு தண்டுழாய் மாய நின்னை நாயினேன் வ ணங்கி வாழ்த்து மீதெல்லாம் நீயுநின் குறிப்பினிற் பொ றுத்து நல்கு வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேயவேலை வண்ணனே - 861 | இப்பாடலில் திருமழிசையாழ்வார் நீர்ப்பாயல் என்று குறிப்பிடுவது திருப்பாற்கடலை அல்ல. திருக்கடன் மல்லையைத்தான். சலசயனப் பெருமாளைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார். அஃது எங்ஙனமெனில் திருமழிசையாழ்வார் திருப்பாற்கடலுக்கு மங்களாசாசனம் செய்த பிற பாசுரங்களில் நலங்கடல் கிடந்து (768) என்றும் பால் நிறக்கடல் கிடந்த (774) என்றும் பௌவநீர் படைத்தடைத்ததிற் கிடந்து (779) என்றும் கடைந்தபாற் கிடந்து (832) என்றும் குறிப்பிடுகிறார். எனவே பாற்கடல் என்பது வேறு. நீர்ப்பாயல் என்பது வேறு. இதே போல் திருமங்கையாழ்வாரும் திருப்பாற்கடலுக்கு இட்டருளின எந்தவொரு பாசுரத்திலும் திருப்பாற்கடலை நீர்ப்பாயல் |