எம்பெருமான் எப்போதும் தனது வலமார்பினைப் பிராட்டிக்குத் தந்திருப்பர். அதுபோன்று இவ்விடத்தில் காட்சியளித்தமையால் இத்தலம் திருவடந்தையிலும் சிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். மேலும் திருவடந்தையில் திருமணக்கோலத்தில் நித்ய கல்யாணப் பெருமாளாகக் காட்சியளித்தார். இவ்விடத்தில் ஏனப்பிரானுக்கு ஹரிகேச வர்மனால் ஒரு கோவில் எழுப்பப்பட்டது. ஏனத்தின் உருவாகி நிலமங்கை யெழில் கொண்டான் வானத்தி லவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ளக் கானத்தின் கடல் மல்லைத் தலசயனத் துறைகின்ற ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் னாயகரே | பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்பதையும் திருமங்கையாழ்வார் இப்பாடலில் குறித்துள்ளார். 10) கடற்கரைக் கோவிலின் மூலவர் தலசயனத் துறைவார். உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு சிறு தாமரை மொக்குடன் திகழ்கிறார் இதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாகவும் ஐதீஹம். பார்ப்பதற்கு மிக்க ரம்மியமானவர் இவர். கையில் தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் 108இல் இவர் ஒருவர்தான். 11) பல்லவ மன்னர்கள் கலைத்தாய்க்குச் சிற்பக் கலையை காணிக்கையாக அர்ப்பணித்த இவ்விடத்திற்கு அர்த்த சேது என்றும் ஒரு பெயரும் உண்டு. 12) இப்போதுள்ள கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையென்றும், அக்கோவில் கடலுக்குள் மூழ்கிவிட்டதென்றும், கடலுள் கிடந்த இக்கருமாணிக்கம் (பெருமாள்) தன் பக்தரின் கனவில் தான் இருப்பதை யுணர்த்த அந்த திவ்ய விக்ரஹத்தை எடுத்துவந்து இப்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் மரபுவழிக் கதைகள் உள்ளன. 13) திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் மங்களாசாசனம் திருமங்கை இரண்டு பதிகங்கள் அருளியுள்ளார். |