6) இராமானுஜர் தமது விசிஸ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க நியமித்த 74 சிம்மாசனங்களில் இதுவும் ஒன்று. 7) ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில் ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில் பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும். 8) தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார். 9) முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம். 10) ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், மணவாள மாமுனியும், இராமானுஜரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். 11) கி.பி. 1781ல் ஆங்கிலேயருக்கும், ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப்போர் இத்தலத்தின் முன்பகுதியில் நடைபெற்றபோதும் அவர்களால் இக்கோவிலுக்கு ஊறு நிகழவில்லை. 12) அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும். 13) ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம். 14) இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர். ஏனெனில் முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில் கொண்டிருந்தாராம். இப்போது |