பக்கம் எண் :

403

     காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே
வந்துவிட்டதாகவும், அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும்
கூறுவர். பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில்
கட்டப்பட்டுவிட்டது.

     இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று ஐந்து மூர்த்தி திருக்கோவில்
என்றும் இதனை வழங்குவர்.

மூலவர்

     உய்யவந்த பெருமாள், அபயப்ரதன், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்

     வித்துவக்கோட்டு வல்லி, பதமாஸனி நாச்சியார்.

தீர்த்தம்

     சக்ர தீர்த்தம்

விமானம்

     தத்வ காஞ்சன விமானம்

காட்சி கண்டவர்கள்

     அம்பரிஷன் (பஞ்சபாண்டவர்கள்)

சிறப்புக்கள்

     1. திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும்,
திருவீக்கோடு எனவும் வழங்கப்படுகிறது. பார்ப்பதற்குத் தூய பழைய
தமிழ்நாடாக இருந்து காலப்போக்கில் தமிழ் குறைந்து கேரளம் வலுத்ததாகத்
தெரிகிறது. இருப்பினும் இங்கு தமிழுக்குப் பஞ்சமில்லை.

     2. கோவிலின் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும்,
சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி,
தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த
வண்ணங்களில் மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பார்ப்பதற்குப்
பேரழகு பொருந்தியதாகும் இவைகள்.

     3. கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரால் மட்டும் 10
பாக்களில் மங்களா சாசனம், மூலவரின் திருநாமத்தை உய்ய வந்த பெருமாள்
என்று பாசுரத்தில் சுட்டவல்லையாயினும் உன்னைவிட்டால் எங்ஙனம் நான்