கொண்டாடும் நாளில் உனக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து மக்கள் விழாவெடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்றழைக்கின்றனர். ஓணம் பண்டிகை மலையாளத்தில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மகாபலியும் திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப்பெருந்திருவிழா இது ஒன்றுதான். மூலவர் காட்கரையப்பன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அப்பன் என்பதே மூலவரின் திருநாமம். தாயார் பெருஞ்செல்வ நாயகி வாத்ஸல்யவல்லி. தீர்த்தம் கபில தீர்த்தம் விமானம் புஷ்கல விமானம் காட்சி கண்டவர்கள் கபில முனி சிறப்புக்கள் 1. தற்காலத்தில் புகழ்பெற்றுத் திகழும் கொச்சிப் பல்கலைக்கழகத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் செழுமை மிக்க சோலைகளின் மத்தியில் சீர்மை பெற்றுத் திகழ்கிறது இத்தலம். 2. கிழக்கும், மேற்குமாக இருபுறமும் வாயில்கள் அமைந்த இத்தலத்தின் முன்புறம் யானைப் பந்தல் ஒன்றும், பின்புறம் அமைந்துள்ள 8 அடி நீளமுள்ள பலிபீடமும் கோவிலுக்கு மேலும் அழகு தருகிறது. 3. வாமனத்தலம் என்று வழங்கப்படும் இத்தலத்தில் மகாவிஷ்ணு மாவலிக்கு வாமனனாக எவ்விதம் காட்சியளித்தாரோ அதேபோல் காட்சி அளிக்கிறார். இத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் வட்டவடிவில் அமைந்துள்ள மிகப் பெரும் கருவறை மண்டபம் காண்பதற்குப் பேரெழில் வாய்ந்தது. நமஸ்கார |