68 திருமூழிக்களம் பூந்துழாய் முடியாருக்கு பொன்னாழிக் கையாருக்கு ஏந்து நீரிளங் குருகே திருமூழிக் களத்ததாருக்கு ஏந்து பூன் முலைபயந்து என்னினை மலர்கண்கள் நீர் ததும்ப தாம்தம்மை கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே (3631) திருவாய்மொழி 9-7-9 | தலைவனைப் பிரிந்த தலைவி தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்தி பறவைகள் மூலம் தூது விடுதல் நம் பைந்தமிழரின் பண்டை பண்பாடு. இந்த பாணியில் நம்மாழ்வாரும் தன்னைத் தலைவியாகப் பாவித்துக்கொண்டு திருமூழிக்களத்தே எழுந்தருளியுள்ள, அப்பனுக்கு ஆட்பட்டு விரக தாபம் கொண்ட தன் நிலையை விவரித்து பறவைகள் மூலம் தூது விடுகிறார். துளசி மாலை சூடி பொலிந்து நின்று, பொன் போல் ஒளிரும் சக்கரத்தைக் கையில் கொண்டுள்ள திருமூழிக்களத்தானுக்கு, கண்ணீர் ததும்ப நிற்கும் என்நிலையை எடுத்துச் சொல்லி இவளைக் கைவிட்டு விடாதீர். அவ்வாறு கைவிடுதல் உமக்குத் தகுதியன்று என்று குருகு என்னும் பறவையின் மூலமாகச் சொல்லி தூதுவிடுகிறார் குருகூரார். ஆம் திருக்குருகூர் பயந்த ஆழ்வாரன்றோ இவர். அதனால் குருகையே தூதுவிட்டார். கேரளாவில் உள்ள ஆலவாயிலிருந்து இத்தலத்திற்கு எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன. எர்ணாகுளத்திலிருந்தும் அங்கமாலி ரயில் நிலையத்திலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதியுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த இத்தலம் தற்போது ஒரு சிறிய நகருக்கொப்பாக வளர்ந்துகொண்டிருக்கிறது. மிக அமைதியான சூழலில் இயற்கை எழிலோடு இணைந்து நிற்கிறது. இத்தலம். வரலாறு ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான், உமது விருப்பம் என்னவென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக்கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள் கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னையடைய கடைப்பிடிக்க வேண்டிய | |
|
|