நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸு க்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அம்முனிவர்க்கு வழங்கினார். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் பொருள்காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. மூலவர் திருமூழிக்களத்தான். அப்பன் ஸ்ரீஸு க்திநாதன் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலம். தாயார் மதுரவேணி நாச்சியார். தீர்த்தம் சங்க தீர்த்தம், சிற்றாறு விமானம் சௌந்தர்ய விமானம் காட்சி கண்டவர்கள் ஹாரித மஹரிஷி சிறப்புக்கள் 1. பாரதப் புழை ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாசேஷத்ரமாக விளங்கியிருக்கிறது. ஸ்ரீஸு ஸீக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது. 2. இராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப்போக பரதன் வந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான். இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து |