இலக்குவனை ஆரத்தழுவி இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம் ஆயிற்றென்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். திருமங்கையாழ்வார், பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான் என்னானாய் எண்னானாய் எண்ணல் அல்லால் என்னறிவே னேழையேன் உலக மேத்தும் தென்னனாய் வடவானாய் குட பாலனாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே 2061 | என்று மங்களாசாசனம் செய்து பாசுரத்தில் பின்னனார் வணங்கும் சோதி என்பது இராமனின் பின்னவரான இலக்குவனாரால் வணங்கப்பட்டதையே குறிக்கும். இத்தலம் இயற்கை எழில் கொஞ்ச இருந்ததை திருமங்கையின் பாசுரத்தினாலும் உணரலாம். 3. நம்மாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 4. இத்தலத்தின் எம்பெருமானை ஆழ்வாரின் பாசுரங்களோடு இனிமையாகப் பாடியேத்த வல்லார்கட்கு எந்த நோயாக இருந்தாலும் அந்நோய் அறுபட்டு ஓடும் என்பதை. ‘ஒழிவின்றி திருமூழிக் களத்துறையும் ஒன்சுடரை ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல் வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும் நோயறுக்குமே’ என்று அறுதியிடுகிறார் நம்மாழ்வார். | 5. இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப் பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு. |