69. திருவல்லவாழ் காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே (3210) திருவாய்மொழி 5-9-6 | என்று நம்மாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட திருவல்லவாழ் என்ற திவ்ய தேசம் கேரளத்து மக்களால் திருவல்லா, திருவல்லா என்று இனிமை கொஞ்ச அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு கோட்டயத்தில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு. கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டியில் ஏறி திருவல்லா புகைவண்டி நிலையத்தில் இறங்கி (சுமார் 4 கி.மீ. தூரம்) இத்தலத்தை அடையலாம். சகலவசதிகளும் நிறைந்த சிறந்த நகரமாகும். கோட்டயத்திலிருந்து கீழ்கண்ட மார்க்கத்தில் சென்றால் திருவல்லாவைச் சூழ்ந்து அமைந்துள்ள ஆறு திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம். கோட்டயத்திலிருந்து 5 மைல் தூரம் செங்கனாச்சேரி, செங்கனாச் சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம். திருக்கடித்தானத்திலிருந்து 5 மைல் தூரம் திருவல்லா. திரு வல்லாவிலிருந்து 5 மைல் தூரம் திருவண் வண்டூர் (இந்த திருவன்வண்டூருக்கு செங்கனாச் சேரியிலிருந்து எரிமேலி வந்து எரிமேலியிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் சென்றும் அடையலாம்] திருவண் வண்டூரிலிருந்து 4 மைல் தூரத்தில் திருச்செங்குன்றூர். இந்த திவ்யதேசத்தை இப்பகுதி வாழ் மக்கள் செங்கானூர் என்றும், சேங்கனூர் என்றும் வழங்குகின்றனர். திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே 4 மைல் தூரத்தில் திருப்புலியூர் என்னும் திவ்யதேசம். இங்கிருந்து மீண்டும் செங்கனாச்சேரி சென்று, செங்கனாச்சேரியிலிருந்து 10 கீ.மி. கிழக்கு திசையில் சென்றால் திருவாறன்விளை (திரு ஆரம் முளா] என்னும் திவ்ய தேசம். | |
|
|