திருவல்லாவாழ் எனப்படும் இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி கருடபுராணம். மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகிறது. வரலாறு. சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதையானவர் இத்தலத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று பிரம்மச்சாரிகட்கு உணவு படைத்து அதன்பின் தான் விரதம் விடும் பழக்கத்தைப் பெற்றவளாய் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அப்பெண் அரக் கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக்கொண்டாள். எம்பெருமானே பிரம்மச்சரிய வேடத்தில் வந்து தோலகாசுரனை எதிர்த்தார் தோலகாசுரன் மிகக் கடுமையாக எம்பெருமானுடன் யுத்தம் செய்யவே எம்பெருமான் சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை துண்டு துண்டாக்கியது. அவனது தலைவீழ்ந்த இடம் தலையார் என்றும் அவனது கை விழுந்த இடம் முட்டாறு என்றும் கால்கள் விழுந்த இடம் காலாறு எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது. தன்னில் படிந்திருந்த ரத்தத்தை சுதர்சனர் சத்தம் செய்த இடம் சக்கரகாலக் கடவு என்றும் வழங்கப்படுகிறது. இதன்பின்னர் இச்சக்கரம் திருவல்லாணின் பின்புறம் போய் குடிகொண்டது. அந்த அரக்கனைக் கொன்றுவிட்டு தூவாதசியன்று (விரதம் விட) பாரணைக்கு வந்ததாகவும், திருவாழ் மார்பை பிரம்மச்சாரி மறைப்பதைக் கண்ட அப்பதிவிரதை வந்திருப்பது எம்பெருமான் என்று ஐயுற்று திருவாழ் மார்பை தரிசிக்க வேண்டுமென்று கேட்க, அவளின் வேண்டுகோளின்படியே திருவாழ் மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயருண்டானதாக வரலாறு. இந்தப் பதிவிரதையானவள் கமுகு மரத்தின் பாளையில் எம்பெருமானுக்கு அன்னமிட்டு உப்புமாங்காயை அளித்தாளாம். இதை உண்டுவிட்டு இந்த ஆலயமிருக்குமிடம் வந்து எம்பெருமான் கிழக்குநோக்கி திரும்பி நின்றதாலும் திருவல்லா அல்லது திருவல்லர் என்றாயிற்றென்பர். கண்டாகர்ணன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து எட்டெழுத்துமந்திரத்தை ஜபிக்கலானான். அம்மந்திரத்தை ஜபிக்கும்போது கிருஷ்ணநாமம் தவிர வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழுகாதிருக்கும் பொருட்டு தங்கத்தால் |